15 22
இலங்கைசெய்திகள்

அநுர ஆட்சியில் 750,000 அரச ஊழியர்களுக்கு ஆபத்து : கவலையில் நாமல்

Share

அநுர ஆட்சியில் 750,000 அரச ஊழியர்களுக்கு ஆபத்து : கவலையில் நாமல்

அரச சேவையை வலுப்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 750,000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய அலுவலகத்தை பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. அரசாங்கம் வெளியிடும் தகவலுக்கமைய, அவர்கள் ஒரு அரசியல் வேட்டைக்குத் தயாராகி வருவது தெளிவாகின்றது.

அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தாலும், அதற்கான திட்டம் என்ன என்பதை அறிவிக்கவில்லை.

அந்த சூழ்நிலையில், அரசியல் பழிவாங்கலுக்குள்ளான அனைவருக்கும் ஆதரவாக நிற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்தது. அதற்காக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

அரச இயந்திரத்திற்குள் ஏதோ ஒரு வகையான வேட்டை நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. அதில், தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

இந்த அரசாங்கத்தின் திறமையின்மை மக்களுக்கு தெரியவந்துவிட்டது. இந்த அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தைப் போலவே அரசியல் அடக்குமுறையைக் கொண்டு வந்து, திருடனைப் பிடித்தோம், சிறைப்படுத்துகிறோம் என கூறி அரசியல் பிரசாரத்தை தொடர அரசாங்கம் இப்போது தயாராகி வருகிறது.

அதேவேளை, ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அரசாங்கம் அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாக நாமல் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடக அடக்குமுறையின் அடுத்த கட்டம் அரசியல் அடக்குமுறை என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம் நம்மைத் தடுக்க முடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...