tamilni 542 scaled
இலங்கைசெய்திகள்

பணம் அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு

Share

பணம் அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் முறைமையின்படி அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளரின் பெறுமதி பெறப்பட்டதுடன் அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகை 8,299 மில்லியன் ரூபாவாகும்.

சுயாதீன மதிப்பீட்டாளரிடமிருந்து பெறப்பட்ட மதிப்பீட்டின் ஆரம்ப முதலீட்டு அறிக்கையை சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் சமர்ப்பித்திருந்தார். அதன் மதிப்பீடு 3,256 மில்லியன் ரூபாவாக காட்டப்பட்டது.

இந்தத் தொகையில் உள்ள வித்தியாசத்தை விளக்குமாறு முதலீட்டாளர் கேட்டிருந்தார். அரச தலைமை மதிப்பீட்டாளரிடம் கோரிக்கை மனு அளித்து, பின்னர் அவர்கள் மீண்டும் அரசின் மதிப்பீட்டு தொகையை உறுதி செய்துள்ளனர். அதன்படி செயல்படுமாறு முதலீட்டாளருக்கு தெரிவித்துள்ளோம்.

பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய அந்நிய கையிருப்பு பற்றாக்குறைதான் நம் நாட்டின் முக்கிய பிரச்சினை.

கோவிட் தொற்றுநோய் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருவதை நிறுத்தினர். போராட்டத்தால், முதலீடு வராமல் நின்றது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வெளிநாட்டு கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என எமது நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம். ஆனால் தற்போது இந்த பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வருகிறார்கள். அவர்கள் விரும்பும் செயல்முறையை நாம் உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...