19 5
இலங்கைசெய்திகள்

கடுமையாகும் சட்டம்! அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை

Share

கடுமையாகும் சட்டம்! அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை

தனியார் துறையில் சேவையில் ஈடுபடும் வாக்காளர்கள் வாக்களிக்க செல்வதற்கு தொழில் வழங்குநர்கள் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு தினத்தன்று கட்டாயம் கடமைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு கடுமையான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வாக்களித்ததன் பின்னர் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்தல் பெறுபெறுகள் வெளியானவுடன் பொது இடங்களில் ஒன்று கூடி, பட்டாசு கொளுத்துவது சட்டத்தின் பிரகாரம் குற்றச்செயலாகும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு தினத்தன்று கடமைகளில் ஈடுபட வேண்டும். கடமையில் ஈடுபடாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...

29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...