11 7
இலங்கைசெய்திகள்

வரலாற்றில் யாரும் பெற்றுக் கொள்ளாத கடன் தொகை! ஒரு வாரத்தில் அநுர அரசாங்கத்தின் செயற்பாடு

Share

வரலாற்றில் யாரும் பெற்றுக் கொள்ளாத கடன் தொகை! ஒரு வாரத்தில் அநுர அரசாங்கத்தின் செயற்பாடு

அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) அதிகாரத்திற்கு வந்து ஒரு கிழமையில் இலங்கையில் வரலாற்றில் யாரும் பெற்றுக்கொள்ளாத கடன் தொகையை பெற்றுக்கொண்டுள்ளார் என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க(Rosy Senanayake) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் அலை ஒன்று ஏற்பட்டு அநுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.

ஆனால் அரசாங்கம் அமைந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வேலைத்திட்டங்களை பார்த்து மக்கள் அவர்களிடம் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மீது மக்களுக்கு விரக்தி நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் கடன்தொகையான 41 பில்லியன் டொலரை செலுத்துவது பெரிய விடயம் அல்ல என அநுரகுமார திஸாநாயக்க அன்று தெரிவித்திருந்தார். அதேபோன்று பணம் அச்சிட்டும் கடன் பெற்றும் நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் ஒன்று எதற்கு என அவர் கேட்டிருந்தார்.

எரிபொருள் இறக்குமதியில் அமைச்சருக்கும் தரகுப்பணம் செல்வதாகவும் அந்த பணத்தை இல்லாமல் செய்து, எரிபொருள் விலையை குறைப்பதாகவும் தெரிவித்தார். அரச சொத்துக்களை திருடியவர்களை 24 மணி நேரத்துக்குள் சிறையில் அடைப்பதாக தெரிவித்தார்.

இவ்வாறு பல்வேறு வாக்குறுதிகளை அவர் வழங்கி இருந்தார். ஆனால் இந்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறாரா?

கடன் பெறுவதில்லை என தெரிவித்த இவர்கள், வரலாற்றில் யாரும் பெறாத கடன் தொகையை அரசாங்கம் அமைத்து ஒரு வாரத்துக்குள் பெற்றுள்ளார்கள். பணம் அச்சிட்டுள்ளனர்.

அரசாங்கத்தை பெற்றுக்கொண்டாலும் இவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எந்த திட்டமும் இவர்களிடம் இல்லை. அதேபோன்று நாட்டை அபிவிருத்தி செய்யவும் இவர்களிடம் வேலைத்திட்டம் இல்லை.

அவ்வாறு இருந்தால் அதனை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். மேலும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அப்படியானால் அந்த வேலைத்திட்டங்களையும் அதனை எப்போது ஆரம்பிப்பது என்ற திட்டத்தையும் நாட்டுக்கு சொல்ல வேண்டும்.

எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் இல்லை. நாட்டை அபிவிருத்தி செய்ய எந்த திட்டமிடலும் இல்லாமலேயே இவர்கள் தேர்தலுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகிய மூன்றுபேறும் இருளில் துழாவிக்கொண்டு, ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தையே முன்னெடுத்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...