எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, கொழும்பில் இன்று கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு இந்தத் தீர்மானத்தை முன்வைத்தது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.
அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
அரசுக்கு ஆதரவாக இருந்தாலும், நாட்டில் நிலவும் உண்மையான நெருக்கடியை மக்களுக்கு எடுத்துரைப்பதில் என்ன தவறு உள்ளது எனவும் அரசிடம் பங்காளிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
#SriLankaNews
Leave a comment