tamilni 402 scaled
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இலங்கையர்கள்: இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறதா

Share

இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இலங்கையர்கள்: இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறதா

தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ள தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. இஸ்ரேலினால் காஸாவில் பிடிக்கப்படட இடங்களுக்கு இவர்கள் தொழிலுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையின் வெளிநாட்டு கொள்கையின்படி நாம் ஒரு அணிசேரா நாடு. இஸ்ரேல்-காசா யுத்தத்தை நாம் எதிர்க்கின்றோம். இதற்காக ஐ.நா.வில் கூட நாம் குரல் கொடுத்துள்ளோம்.

இலங்கையிலிருந்து அரேபிய நாடுகளுக்கு பலர் வேலை வாய்ப்புகளுக்கு செல்கின்றனர். அதேவேளை ஏதாவது ஒரு நாடு எம்மிடம் தமது நாட்டுக்கான தொழிலாளர்களை கேட்கும்போது நாம் இன, மத ரீதியாக செயற்பட முடியாது.

இஸ்ரேல் – காசா யுத்தம் ஆரம்பித்த போது தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி தொழிலாளர்களை அங்கு அனுப்புவதை தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்தோம்.

தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ள தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. இஸ்ரேலினால் காஸாவில் பிடிக்கப்பட்ட இடங்களுக்கு இவர்கள் தொழிலுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.

எனவே இஸ்ரேலுக்கு இலங்கையிலிருந்து தொழிலாளர்களை அனுப்பக்கூடாது என இனவாத கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் இன, மத ரீதியில் கட்சிகளின் பெயர்களை வைத்துக்கொண்டு இவ்வாறு செயற்பட வேண்டாம் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...