சர்வதேச ஆதரவின்றி உரிமை போராட்டத்தால் நிலைகொண்ட தமிழீழ அவலம்!

24 66558396793e7

சர்வதேச ஆதரவின்றி உரிமை போராட்டத்தால் நிலைகொண்ட தமிழீழ அவலம்!

உலகிலேயே எந்தவொரு நாட்டின் ஆதரவும் இல்லாமல் போரை நடத்தி இன்று வரை முடங்கி போயுள்ள சமூகம் என்றால் அது தமிழ் சமூகம்தான் என பத்திரிகையாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ந.கபில்நாத் எழுதிய “யாத்திரை” என்ற நூல் வெளியிட்டு விழாவின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று மட்டிலும் சர்வதேச ஊடகங்களில் முள்ளிவாய்க்கால் போரை பற்றி பேசப்படுகின்றது.

இருப்பினும் நம் நாட்டில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் எங்களைப்பற்றி வன்மமாக எழுதுகின்றார்கள்.

ஒரு வெள்ளையர்களுக்கும் மற்றும் மத்திய கிழக்கு நாட்டு இஸ்லாமியர்களுக்கும் இருக்க கூடிய உணர்வு தங்களை சார்ந்தவர்களுக்கு இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிப்பதை இந்த காணொளியில் மூலம் காணலாம்.

Exit mobile version