tamilni 85 scaled
இலங்கைசெய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம்

Share

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும். மனப்பாட கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தரம் 5, கல்வி பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகளின் சில பாடங்களை மனப்பாடம் செய்து விடை எழுத வேண்டி இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் கல்விப் பரப்பில் புதிய மாற்றங்களை உள்வாங்கி கல்வியின் புதிய யுகத்திற்குள் நுழைய வேண்டும். 50 களில் இருந்து சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாது.

நாமாகவே சுவர்களைக் கட்டிக்கொண்டு, எல்லைகளை வகுத்து, சுருங்கிய மனப்பாங்குடன் செயல்படும் போக்கில் ஒரு நாடாக உண்மையான சுபீட்சத்தை எட்ட முடியாது என்பதால், சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது போலவே ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

அதற்காக நாட்டில் இருக்கும் 10,126 பாடசாலைகளிலும் ஆங்கில கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று தற்போது பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம் வரை கற்பிக்கப்படும் தொழிநுட்ப கல்வியை 1ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம வரைக்கும் விருத்தி செய்ய வேண்டும்.

அத்துடன் தொழிநுட்ப கல்வியை தாய் மொழியில் அல்லாமல் ஆங்கில மொழியிலேயே கற்பிக்க வேண்டும். அதன் மூலமே அதன் உண்மையான கல்வியை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேநேரம் நாட்டில் இருக்கும் அனைத்து பாடசாலைகளையும் ஸ்மாட் வசதி உள்ள பாடசாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மாட் கல்வி மூலமே ஸ்மாட் நாட்டை ஏற்படுத்த முடியும்.

மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் கல்வியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தொழிற்பயிற்சி கல்வியை நாடினாலும், தற்போது, அதன் தரம் குறைந்துள்ளது. உயர்கல்வி வாய்ப்புகளை வலுப்படுத்த வேண்டும். உயர் கல்விக்கான வாய்ப்புகளை இழந்தோர்களுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும்.

நாட்டில் 70 வீதமானவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கும் உயர்கல்விக்கான உரிமை வழங்கப்பட வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்க்கும் பெரும்பான்மையானவர்களின் பிள்ளைகள் தனியார் பல்கலைக்கழகங்களிலும் நிறுவனங்களிலும் கல்வி கற்கிறார்கள்.

தனது சொந்த பிள்ளைகளுக்கு வழங்கும் அதே விருப்பத்தை நாட்டின் ஏனைய பிள்ளைகளுக்கு அந்த முறைமை பொருத்தமற்றது என்று வீதிக்கிறங்குகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையின் ஊடாக நாட்டின் இலவச கல்வியை பலப்படுத்தி, முற்போக்கான மற்றும் நவீனமயமாக்கல் செயற்பாடுகளை முன்னெடுத்து, கல்வி வாய்ப்புகளையும் கல்விசார் தெரிவுகளையும் வழங்குவதற்கு செயற்படுவோம்.

அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும். மனப்பாட கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தரம் 5, கல்வி பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகளின் சில பாடங்கள் மனப்பாடம் செய்து விடை எழுத வேண்டி இருக்கிறது.

அதேபோன்று பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கு நாங்கள் ஆதரவு. ஆனால் மாணவர்கள் அதிகரிக்கப்படுவதுபோல் மனித வள மற்றும் பெளதிக வளங்கள் அந்த பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டும்.இன்று அது முறையாக இடம்பெறாததால் பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழங்களின் தரம் குறைந்துள்ளது.

உலக பல்கலைக்கழகங்கள் 500இல் இந்த பல்கலைக்கழகங்கள் இருந்து வந்தன. ஆனால் தற்போது அது இல்லை. பல்கலைக்கழகங்களில் இருந்த பேராசிரியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர். சிலர் விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பல்கலைக்கழங்களில் கற்பிப்பதற்கு போதுமான பேராசிரியர்கள் இல்லை.பேராசிரியர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அவர்களின் வரி அதிகரிப்பை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் மொத்த தேசிய உட்பத்தியில் கல்விக்கு 4,5 வீதம் ஆவது ஒதுக்க வேண்டும். அதன் மூலமே நாட்டில் கல்வித்துறையை முன்னேற்ற முடியும் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...