24 6617691e3eb5c
இலங்கைசெய்திகள்

23 மாதங்களில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம்

Share

23 மாதங்களில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம்

2022இல் சுவாசித்ததை விட பத்து மடங்கு அதிகமாக சுவாசிக்கக்கூடிய சூழலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று உருவாக்கியுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.

கடந்த 23 மாதங்களில் நாட்டை முந்தைய பொருளாதார நிலைக்கு கொண்டு வர அவரால் முடிந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் வீடுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2022இல் சுவாசித்ததை விட பத்து மடங்கு அதிகமாக சுவாசிக்கக்கூடிய சூழலை இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உருவாக்கியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் மூன்று வேளையும் சாப்பிட முடியாமல், வரிசையில் நின்று அவதிப்படும் சமுதாயம் இருந்தது.

அப்போது ஜனாதிபதி பதவியை ஏற்று மக்களுக்காக பாடுபடுங்கள் என அன்றைய ஆட்சியாளர்கள் எவ்வளவோ கூறினாலும் அந்த சவாலை ஏற்றுக் கொள்ளும் தலைவர் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை.

ஆனால் நாடாளுமன்றத்தில் தனி ஆசனம் பெற்ற ரணில் விக்ரமசிங்க அந்த சவாலை ஏற்று மக்களை வாழ வைக்கும் பொருளாதார நிலையை உருவாக்கியிருந்தார். கடந்த 23 மாதங்களில் நாட்டை முந்தைய பொருளாதார நிலைக்கு கொண்டு வர அவரால் முடிந்தது.

இன்று புறக்கோட்டை, மஹரகம, பதுளை உள்ளிட்ட இலங்கையின் எந்த நகரத்திலும், பெருந்திரளான மக்கள் பண்டிகை காலத்திற்காக பல்வேறு கொள்முதலில் ஈடுபடுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் மீண்டுள்ளது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் இன்று நாடு எந்த நிலையில் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் எதிர்க்குழுக்களிடம், ஏன் அன்று சவாலை ஏற்கவில்லை என்று கேட்க வேண்டும்.

அந்த அந்தக் குழுக்களுக்கு பொருளாதாரக் கோட்பாடு மட்டுமே தெரியும். அவர்களுக்கு நடைமுறை பொருளாதாரம் தெரியாது. அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்கவும் ஜனாதிபதி ஏற்பாடு செய்தார். தொழிலாளர்களுக்காக பேசும் எந்த கட்சியும் இவ்வளவு கூலி உயர்வு செய்யவில்லை. இன்று ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது. நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் மீது சர்வதேச சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளதாலேயே இவை அனைத்தும் நடக்கின்றன. எனவே இன்று வீட்டிற்குச் சென்று உங்களுக்கு கிடைத்த வீட்டைப் பற்றி மீண்டும் சிந்தியுங்கள். தவறை மீண்டும் செய்தால், நம்மை விட நம் குழந்தைகள் எதிர்காலத்தை இழக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f95d9f05e86
செய்திகள்அரசியல்இலங்கை

2026 மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைப்பு: கட்சிக்குள் ஆழமான கலந்துரையாடல்கள் காரணம்!

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை...

25 68f9483b692e2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தேவை: சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்கவின் ஆவேச உரை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இவர் நாவலப்பிட்டியில்...

images 1 5
செய்திகள்உலகம்

போர் நிறுத்தம் பின்னணியிலும் நெருக்கடி: கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் நெதன்யாகுவை கைது செய்ய தயார்!

இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது அமைதி ஒப்பந்தம் (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ள...

1761139778 Piumi Hansamali Sri Lanka Ada Derana 6
செய்திகள்இலங்கை

“பத்மே எனது அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தத்தான் சொன்னேன்”: பாதாள உலகத் தொடர்பு குற்றச்சாட்டுக்கு பியூமி ஹன்சமாலி விளக்கம்!

பாதாள உலகக் குழுக்களின் தலைவராகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக...