24 6688f821b7a76
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் நற்செய்தி

Share

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் நற்செய்தி

நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது என்ற நற்செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

நாரஹேன்பிட்டி, எல்விடிகல வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு நேற்று (05) பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க வண. மகுலேவே விமல மகாநாயக்க தேரரைச் சந்தித்து நலன் விசாரித்ததுடன், சிறு கலந்துரையாடிலும் ஈடுபட்டார்.

 

 

இதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக நாங்கள் இப்போது தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் வர்த்தக கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடலை முடித்துள்ளோம்.

 

நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது என்ற நற்செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

 

அதேபோன்று, கடனை செலுத்துவதற்கு 04 வருட கால அவகாசம் மற்றும் கடனை முழுமையாக செலுத்த 2043 வரை கால அவகாசம் பெறவும் முடிந்துள்ளது. இந்த நலன்களைப் பயன்படுத்தி இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

 

அதற்காக, அடுத்த இரண்டு வருடங்களில் திட்டமிட்ட வகையில் செயற்பட்டால் மீண்டும் கடன் பெறாத நிலைமைக்கு நாட்டைக் கொண்டு செல்ல முடியும். பௌத்த நாடான தாய்லாந்து இன்று திறந்த பொருளாதாரத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளது.

 

1950 இல் தாய்லாந்து இலங்கையை விட இரண்டு மடங்கு கடனில் இருந்தது. ஆனால் இன்று, ஏற்றுமதியின் அடிப்படையில் சாதகமான பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...