24 6688e2de494e3
இலங்கைசெய்திகள்

முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

Share

முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

மன்னார் (Mannar) – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்று (05.07.2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

கம்பிகளின் மொழி பிரேம் என அழைக்கப்படும் 42 வயதான கோபாலகிருஷ்ணன் கோகுல் பிரேம்குமார் என்ற முன்னாள் போராளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், நேற்றிரவு அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, திடீரென தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என சத்தமிட்டுள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரின் சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, உயிரிழந்த முன்னாள் போராளி ஒரு கால் மற்றும் ஒரு கையும் இழந்தவர் என்பதுடன் பல்துறை சார் ஆளுமை மிக்கவர் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...