இலங்கை
மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்
மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்
வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மாணவன் அன்ரனி சரோன் டயஸ் சாதனை படைத்துள்ளார்.
உயிரியல் விஞ்ஞான பிரிவில் முதல் நிலையை பெற்ற புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவன் அன்ரனி சரோன் டயஸ் பாடசாலை சமூகத்திற்கும் மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வெளியாகி உள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி மன்னார் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதல் நிலையை அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் பெற்றுள்ளார்.