world dengue day 5 ways to prevent dengue according to
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எச்சரிக்கை! நாடு முழுவதும் வேகமாகப் பரவும் டெங்கு: தென்மேற்கு பருவமழையினால் அதிகரிக்கும் ஆபத்து!

Share

இலங்கையில் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்கக்கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 9,480 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதில் 51.3 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கரவின் வழிகாட்டலில் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

தற்போதைய தரவுகளின்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேல் மாகாணத்திற்கு மேலதிகமாக மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை போன்ற தென் மாகாண மாவட்டங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற கிழக்கு மாகாணப் பகுதிகளிலும் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருவமழையினால் நீர் தேங்கி நிற்கும் இடங்களில் நுளம்புகள் பெருகும் வாய்ப்பு அதிகம் என்பதால், பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...