05TB BURIAL1 superJumbo scaled
இலங்கைசெய்திகள்

மனிதப்புதைகுழி அகழ்வின்போது சர்வதேச கண்கானிப்பாளர்களை அனுப்புங்கள் 

Share

இலங்கையில் மனிதப்புதைகுழிகள் அகழ்வு செய்யப்படும்போது அங்கு சர்வதேச கண்கானிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்படவேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அரசாங்கத்திடமும் ஏனைய சர்வதேச நாடுகளிடமும் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையம் ஆகிய 4 அமைப்புக்களும் ஒன்றிணைந்து ‘இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப்பணிகளும்’ என்ற தலைப்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அவ்வறிக்கையில் செம்மணி, மாத்தளை, மன்னார், சூரியகந்த உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மனித புதைகுழிகள் குறித்தும் அவற்றை அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் தடைகள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக மாத்தளை மனிதப்புதைகுழி அகழ்வின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக் ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் அவ்வறிக்கையை மேற்கோள்காட்டி தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கங்களில் செய்திருக்கும் பதிவுகளிலேயே பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல் மூலம் தமது அன்பிற்குரியவர்களை தொலைத்த பல தமிழர்கள் பிரித்தானியாவில் வாழ்வதாக சுட்டிக்காட்டியிருக்கும் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக், “இலங்கையில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் முறையான ஆதார சேகரிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு நாம் சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர ஷர்மாவும் மேற்குறிப்பிட்டவாறான வலியுறுத்தலை செய்திருக்கின்றார்.

“இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடனான எமது ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றோம். இலங்கையில் மனிதப்புதைகுழி அகழ்வின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் அங்கு பிரசன்னமாவதை உறுதிப்படுத்துமாறு எமது அரசாங்கத்திடமும், ஏனைய சர்வதேச நாடுகளிடமும் கோருகின்றோம். உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உள்ளது ” என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...