ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மற்றுமொரு குண்டுத் தாக்குதல்

tamilni 319

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மற்றுமொரு குண்டுத் தாக்குதல்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்க முன்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் போன்றதொரு தாக்குதல் மீண்டும் நடத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாரேனும் தலைமறைவாகியிருந்தால் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version