இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளை எச்சரித்த பெல்ஜிய பயணி

24 6619e9e57f849

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளை எச்சரித்த பெல்ஜிய பயணி

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பெல்ஜியப் பயணியான யூட்டியூபர் Tim Tense இலங்கையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் தனது களுத்துறை பயணித்தின் போது ஒரு பிரச்சனைக்குரிய சந்திப்பைப் பகிர்ந்து கொண்டார்.

Tim வெளியிட்ட தகவலுக்கமைய, அவர் உள்ளூர் உணவகத்தில் ஒரு மோசடிக்குள்ளாகியுள்ளார்.

ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 1000 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. இலங்கையின் களுத்துறையில் இந்த மனிதனைத் தவிர்க்கவும் என்ற தலைப்பில் தனது யூடியூப் வீடியோவில், Tim தனது அனுபவத்தை விவரித்தார்.

முச்சக்கரவண்டியில் களுத்துறையை பார்வையிட்டார். வாகனத்தை நிறுத்தியவுடன், அவரை ஒரு இலங்கை நபர் அணுகியுள்ளார்.

உண்மையான இலங்கை உணவு அனுபவத்திற்காக வதனி வில்லாஸ் என்ற சைவ கடைக்கு அழைத்துச் செல்ல குறித்த இலங்கையர் முன்வந்துள்ளார்.

ஆரம்பத்தில் உணவருந்தத் திட்டமிடாவிட்டாலும், ஒரு உளுந்து வடையும் சாதாரண தேநீரும் பரிமாறப்பட்ட பின்னர் 1000 ரூபாய் கோரியுள்ளார்.

80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வடைக்கு 1000 ரூபாய் அறவிடுவதனால் மோசடிக்குள்ளாகுவதனை அறிந்துக் கொண்டு சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் இந்த நபரிடம் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இலாபத்திற்காக நேர்மறையற்ற முறையில் செயற்படுவது தவறு என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version