இலங்கை வங்கி கட்டமைப்புக்குள் நுழைந்து கொள்ளையடித்த உக்ரேனிய பெண்

இலங்கை வங்கி கட்டமைப்புக்குள் நுழைந்து கொள்ளையடித்த உக்ரேனிய பெண்

இலங்கை வங்கி கட்டமைப்புக்குள் நுழைந்து கொள்ளையடித்த உக்ரேனிய பெண்

இலங்கை வங்கி கட்டமைப்புக்குள் நுழைந்து கொள்ளையடித்த உக்ரேனிய பெண்

இலங்கை வங்கி கணக்கிற்குள் ஊடுரூவிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையில் உள்ள தனியார் வங்கிக் கணக்கு ஒன்றின் கணினி தரவு அமைப்பில் நுழைந்த பெண் ஒரு கோடி 27 லட்சத்து 65ஆயிரம் ரூபாவை மோசடியாகப் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் ஏற்கனவே இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டாரா என இரகசிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சந்தேக நபரான பெண் சர்வதேச மோசடியாளராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அவரைப் பற்றிய கூடுதல் தகவல்களை வெளியிட சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version