போர் தொடர்பில் மறைக்கப்பட்ட இரகசியங்கள்! தமிழர்களுக்காக களமிறங்கிய சிங்களவர்
இலங்கைசெய்திகள்

போர் தொடர்பில் மறைக்கப்பட்ட இரகசியங்கள்! தமிழர்களுக்காக களமிறங்கிய சிங்களவர்

Share

போர் தொடர்பில் மறைக்கப்பட்ட இரகசியங்கள்! தமிழர்களுக்காக களமிறங்கிய சிங்களவர்

தமிழர்களுக்கு நீதி கோரி சிங்களவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனீவாவுக்கு போக ஒரு சந்தர்ப்பம் வேண்டும்; மோடியின் முகத்தை பார்க்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன,

30 வருடகால யுத்தம் தமிழ் மக்களுக்கு பாரிய உயிரிழப்புக்களையும், பொருளாதார அழிவுகளையும் விளைவித்திருக்கிறது. இதற்கு காரணமான காரண கர்த்தாக்களது முகத்திரைகளை நான் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் கிழிப்பேன்.

இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு தான் நிலவுகின்றது என்றால், இந்த மண்ணில் தமிழ் மக்கள் ஆட்சியாளர்களால் சகோதரர்களாக நடத்தப்படாமல் மாற்றான் தாய் மக்களாக கொல்லப்படுவது ஏன்? இவை தொடர்பான உண்மைகளை நான் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் வெளிப்படுத்துவேன்.

இவர்களால் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான கொலைகளின் 27900 படங்கள் என்னிடம் இருக்கிறது. மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைகள் தொடர்பான காணொளிகள் என்னிடம் இருக்கிறது.

அதனை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் ஒப்படைக்க நான் தயார். அதற்கு எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள். அவற்றை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது என்னுடைய கடமையாகும்.

01.09.2021 அன்று இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உடனடியாக விசாரைணகளை ஆரம்பிக்கும் படி நான் சமர்ப்பித்த போர் இரகசிய விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...