tamilnih 1 scaled
இலங்கைசெய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

Share

தாய்லாந்திற்கு விஜயம் செய்த இலங்கையர்கள் குழுவொன்று நாடு திரும்ப முடியாமல் தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் தங்கியுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் குழுவை இலங்கைக்கு அழைத்து வரவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டமையே இதற்கு காரணம்.

ஊடகத்திடம் பேசிய சுற்றுலாப் பயணிகள் குழுவில் இருந்த இலங்கைப் பெண் ஒருவர், இந்த நாட்டிற்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் பிற்பகல் 01:55க்கு சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் அந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை சுற்றுலா பயணிகள் குழு மீண்டும் பேங்கொக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

இன்று காலை அவர்கள் மீண்டும் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், அந்த விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 01:10க்கு கட்டுநாயக்கவிற்கு செல்லவிருந்த விமானமும் தாமதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...