ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சு இணக்கப்பாடுமின்றி நிறைவடைந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சீர்செய்வதற்கு சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைக்குமாறு, அவ்வாறு அமையும் அரசின் அமைச்சரவையில் ராஜபக்சக்கள் இடம்பெறக்கூடாது எனவும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மேற்படி பிரதிநிதிகளை ஜனாதிபதி நேற்றிரவு அழைத்திருந்தார். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் பிரதானிகள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
சுமார் இரண்டு மணிநேரம்வரை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இடைக்கால அரசு அமைப்பது தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரியவருகின்றது.
#SriLankaNews