விசேட போக்குவரத்து திட்டங்கள்

image 7fefb8b052

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதன்படி, இன்றும், நாளையும் மற்றும் பெப்ரவரி மாதத்தில் 1, 2, 3 ஆம் திகதிகளிலும் இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்றும்  நிகழ்வு நடைபெறும் பகுதியை உள்ளடக்கி விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தினங்களில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வீதிகள் மூடப்படவுள்ளதுடன், சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

#SriLankaNews

Exit mobile version