அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு!
இலங்கைசெய்திகள்

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு!

Share

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு!

விவசாய பயிர்களுக்கு நீர் வழங்குமாறு கோரி விவசாயிகள் குழுவொன்று மாத்தறைக்கு படையெடுக்கவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அமைச்சரின் வீட்டிற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸ் தடுப்புகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் குழுக்கள் நுழைவதை தீவிரமாக சோதனை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் இருந்து மாத்தறைக்கு பிரவேசிக்கும் பகுதியிலும், கொழும்பில் இருந்து மாத்தறைக்குள் நுழையும் பகுதியிலும் இரண்டு விசேட பொலிஸ் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இரவு பகலாக தொடர்ச்சியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும், 25 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 15 இற்கும் மேற்பட்ட இரும்பு சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தேவையெனில் இராணுவத்தை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, கடும் வறட்சி நிலவும் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தண்ணீர் கோரி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...