விசேட தீர்மானம் இன்று! – திலும் அமுனுகம தெரிவிப்பு

Lockdown RL SM

நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஊரடங்கை தளர்த்துவதா இல்லை நீடிப்பதா என்ற தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது.

இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இக் கூட்டத்தில் பாடசாலைகளை மீளத்திறத்தல், மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் மற்றும் தடுப்பூசி வழங்கப்படும் வயதெல்லை என்பவை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

எவ்வாறிருப்பினும் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிக்குமாறு இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version