எம்.பிக்களின் வீடமைப்புத் தொகுதிக்கு அதிவிசேட பாதுகாப்பு!

அதிவிசேட பாதுகாப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதி வெலயிலுள்ள வீடமைப்பு தொகுதியின் பாதுகாப்புக்கென பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு மேலதிகமாக இந்த வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் புலனாய்வுப் பிரிவினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாதுகாப்புப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெறுகின்றது.

#SriLankaNews

Exit mobile version