இலங்கையிலுள்ள அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு

24 660a476acefe9

இலங்கையிலுள்ள அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு

சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என இலங்கையின் அனைத்து ஆயுதப்படை (Armed Forces) உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பில், ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இலங்கையின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் பாதுகாப்பு அமைச்சிற்கும் இந்த விடயத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவத்திற்கு சேவையாற்றுவதற்கு இலங்கை இராணுவத்தினரை அனுப்புவதற்கு இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இவ்வாறான சூழலில் இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version