சபாநாயகர் தலைமையில் நாளை விசேட கூட்டம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகபோவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைக்க அவர் தயாராகிவிட்டார்.

இந்நிலையிலேயே அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு கட்சி தலைவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version