சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள உத்தேச அரசமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சின் முன்னேற்றம் தொடர்பில் நிதி அமைச்சரின் அறிக்கை எதிர்வரும் 4ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.
இதற்கமைய அன்றைய தினம் முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 5.30 வரையில் நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது.
#SriLankaNews
Leave a comment