அலரிமாளிகையில் நாளை மாலை 5 மணிக்கு விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஏற்பாடு செய்துள்ளார்.
இக்கூட்டத்துக்கு மாகாணசபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் அரசுக்கு ஆதரவான பிரசார செயற்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews