அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய ஹியூமன் இம்யூனோகுளோபுலின் மருந்து பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக பரிசீலிக்க சட்டமா அதிபரால் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மருந்து பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில் மஹேன் வீரமன், அமலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட குழுவில் உள்ள மஹேன் வீரமன் செப்டம்பரில் ஓய்வு பெற உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீதிபதி மஹேன் வீரமன் பதவி விலகவுள்ளமை குறித்து தலைமை நீதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.