சில்லறை விலை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

gover

இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களின் சந்தைப் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை உட்பட மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் சுவிங் கம் உள்ளிட்ட இனிப்புகள், சொக்லேட், பிஸ்கட், கேக் மற்றும் வாசனை சவர்க்காரங்கள் ஆகியவை இந்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது இறக்குமதியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலை, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட முகவரி ஆகியவற்றை ஆங்கிலத்தில் தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு நேற்று (01) முதல் அமுலுக்கு வருவதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version