கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த விசேட சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பெஹல்காமில் கடந்த மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் பல சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பெஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெஸரன் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.