பாடசாலை மாணவர்களுக்காக, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்கள் மூலம் புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதேவேளை, மாணவர்களுக்கான சிசுசெரிய பஸ் சேவையை முறையாக முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
#SriLankaNews