நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
பாராளுமன்றம் மற்றும் அதனை சூளவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews