ஓரளவு சீரான வானிலை…!!

istockphoto 838472152 612x612 1

Abstract blurred background of traffic jam on heavy rain

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யும் எனவும் சீரான வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Exit mobile version