தபாலக பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! – டலஸ் அழகப்பெரும

dalas

வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்

எஇவ்வாறு நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது  அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முன்வைத்த வாய்மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இக் கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்த பிரச்சினை தொடர்பில் வட மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது வடமாகாணத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version