இலங்கையில் சின்னம்மை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

24 7

இலங்கையில் சின்னம்மை நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நோயைத் தடுக்க உதவும் வெரிசெல்லா தடுப்பூசி தற்போது மருத்துவமனைகளில் கையிருப்பில் இல்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னணி தனியார் மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசிகள் இல்லையென்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தடுப்பூசி, சந்தையில் 7,500 முதல் 9,500 ரூபாய் வரையான விலையில் விற்பனையாகிறது.

சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, அரச மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகளின் கையிருப்பு தீர்ந்து போயுள்ளது.

இதற்கிடையில், அண்மைய வாரங்களில் சின்னம்மை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை சுகாதார அதிகாரிகள் கவனித்துள்ளதாக, குழந்தை மருத்துவ ஆலோசகர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிக்கன் பொக்ஸ் என்ற சின்னம்மை நோய் வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸால் ஏற்படும் தொற்று நோயாகும்.

இது முதன்மையாக தடுப்பூசி போடப்படாத நோயுள்ளவர்களிடம் இருந்து, மற்றவர்களுக்கு பரவுகிறது.

இதன்படி, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் உள்ள, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத 90 வீதமானோருக்கு இந்த நோய் தொற்று ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Exit mobile version