கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான ஆதரவு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவது தொடர்பாக, கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தங்கள் சம்மதத்தை தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.
கொழும்பு மாநகர சபை மக்கள் திசைகாட்டியை நிராகரிக்கும் சூழ்நிலையில், திசைகாட்டியை எதிர்க்கும் கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஒரு கட்சியாக நாங்கள் தேவையான ஆதரவை வழங்க விரும்புகிறோம்.” என்றார்.