rtjy 322 scaled
இலங்கைசெய்திகள்

மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு

Share

மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு

மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரச்சினைகளை தீர்க்க இதுவரை சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த சங்கத்தின் பொதுச் செயலர் எஸ்.பீ.மெதிவத்த குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அமைச்சர் தலையிட வேண்டும் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2022ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 9 மருந்து வகைகளில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாக கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக 156 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கொள்வனவு செய்யப்பட்ட சில மருந்து வகைகளின் தரம், காலாவதி திகதி உள்ளிட்ட சில விடயங்களில் சர்ச்சைகள் உள்ளதாக அந்த கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 5 7
செய்திகள்இலங்கை

தை பிறந்தும் வழி பிறக்கவில்லை: தேசிய மக்கள் சக்தி அரசை கடுமையாகச் சாடிய சாணக்கியன் எம்பி!

மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்வைத்த அரசியல் நம்பிக்கைகள், தற்போதைய ஆட்சியின்...

25 6954c0b705352
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திக்கோவிட்டவில் அதிரடி: ரூ. 4.5 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 285 கிலோவுக்கும் அதிகம் எனத் தகவல்!

இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட பலநாள் மீன்பிடிப்...

images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...