இலங்கையில் முதன்முறையாக, மிகவும் அபாயகரமான செயற்கை தூண்டுதல் போதைப்பொருளான ‘மெஃபெட்ரோன்’ (Mephedrone) கண்டறியப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட குறித்த போதைப்பொருளை அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது இலங்கையில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கைப்படி, இந்த ‘மெஃபெட்ரோன்’ போதைப்பொருள், ‘ஐஸ்’ போன்ற ஏனைய போதைப்பொருட்களை விட மிகவும் அபாயகரமானது எனத் தெரியவந்துள்ளது.
செப்டெம்பர் 21ஆம் திகதி வெலிகமையில் கைது செய்யப்பட்ட மொல்டோவாவைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் என்ற சந்தேகத்தில் கைப்பற்றப்பட்ட பொருளைப் பரிசோதித்தபோதே, இந்த புதிய போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.