முகப்பூச்சு கிரீம்களால் சருமத்துக்கு சிக்கல்

images

சருமத்தை வெண்மையாக்கும் பல்வேறு முகப்பூச்சு க்ரீம்கள் சரும சிக்கல்களை ஏற்படுத்துவதாக தோல் நோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர், சமூகத்தில் பலர் இவ்வாறான முகப்பூச்சுக்களை பயன்படுத்துவதில் முனைப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற அழகுசாதனப் பொருட்களை முகத்தில் பயன்படுத்துவதால் பருக்கள் மற்றும் தேவையற்ற முடிகள் ஏற்படும் என்று கூறிய அவர், கண்களைச் சுற்றி இதுபோன்ற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் கண் அழுத்தத்தை அதிகரித்து கண்புரை கூட ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கூறினார்.

முறையான வைத்திய தரத்தில் இல்லாத இவ்வாறான முகப்பூச்சுக்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் விஷத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version