அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த சில சுயாதீனக் குழுக்கள் எம்மையும் சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் கட்சிகளுடன் புரிந்துணர்வுடனேயே செயற்படுகின்றோம்.
இந்நிலையில், பல கட்சிகள் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளதால் கொழும்பு மாநகர சபையை அரசாங்கம் இழக்கும்.
எனவே, எமது கட்சியே கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கும் என்பதோடு எமது கட்சியை சேர்ந்த ஒருவர் மேயர் ஆகவும் நியமிக்கப்படுவார்” என தெரிவித்துள்ளார்.