பதவி விலகுக! – எதிர்க்கட்சியினர் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, போராட்டத்தில் ஈடுபட்டது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி மாளிகை வளாகம்வரை சென்றது.

ஜனாதிபதி மாளிகையை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வீதித்தடைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனால் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதிக்கு முன்பாகவே போராட்டம் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர்.

தற்போதைய அரசு பதவி விலக வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

WhatsApp Image 2022 06 30 at 10.11.40 PM

#SriLankaNews

Exit mobile version