பிரதி சபாநாயகராக நேற்று தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, மீண்டும் குறித்த பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளதாக பிரதி சபாநாயகரின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றில் பிரதி சபாநாயகர் பதவிக்காகப் போட்டியிட்ட அவர் 148 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இதற்கு முன்னதாக, பிரதி சபாநாயகராகச் செயற்பட்ட கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இரு வாரங்களுக்கு முன்னதாக பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அவரது இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 4 நாட்களுக்கு முன்னதாகவே ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment