சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்

image d487af22c9

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் ஆரம்பமாகிறது.

இதனை முன்னிட்டு, யாத்திரிகளின் பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு செல்லும் பிரதான வீதி முதல், மலை உச்சிவரையில் பெருமளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகபொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

சிவனொளிபாதமலை செல்லும் யாத்திரிகர்கள், முறையற்ற விதத்தில் குப்பைகளை அகற்றினால், அதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவனொளிபாதமலைக்கு செல்லும் வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version