இலங்கைசெய்திகள்

சித்தங்கேணி கொலை வழக்கு – கைதான மூவரும் மறியலில்!!

Remanded GTN 1200x900 1
Share

சித்தங்கேணி கொலை வழக்கு – கைதான மூவரும் மறியலில்!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, கலைவாணி வீதியில் நேற்றுமுன்தினம் (25) இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொலைச்சம்பவம் தொடர்பில் சித்தங்கேணியைச் சேர்ந்த தந்தையும் இரு மகன்களுமே சந்தேகநபர்களாக நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ. ஆனந்தராஜா இதன்போது உத்தரவிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...