கிளிநொச்சி – இயக்கச்சி வட்டார மக்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீரன் நேற்று(26) இருவேறு சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் இயக்கச்சி வட்டாரத்திலுள்ள கோயில் வயல், சங்கத்தார் வயல், YMCA விநாயகபுரம், கொற்றாண்டார்குளம், இயக்கச்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும், சிறீரனுக்கும் இடையிலான இருவேறு சந்திப்புகள் நேற்றைய தினம் இயக்கச்சியில் நடைபெற்றுள்ளன.
இருவேறு சந்திப்பு
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினரும், இயக்கச்சி வட்டார வேட்பாளருமாகிய தவராசா ரமேஸ் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, சமுர்த்திக் கொடுப்பனவு, அரச நலத் திட்டக் கொடுப்பனவு என்பவற்றில் நிலவும் குறைபாடுகள், தொடர்ச்சியாக தாம் எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடி நிலைமை, வீட்டுத்திட்டத் தேவைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அப்பிரதேச மக்கள், நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடியிருந்தனர்.
மேற்படி சந்திப்புகளில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் அருள்செல்வி கனகராசா, இயக்கச்சியில் இயங்கும் பல்வேறு சமூகமட்ட அமைப்புகளினதும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment