வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

முல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணி அளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அக வணக்கம் செலுத்தி சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த சிரமதான பணியில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தங்களுடைய குழந்தைகளின் சடலங்களை விதைத்த பெற்றோர், உறவுகள் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிரமதான பணிகளை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

image 016c8b7d32

#SriLankaNews

Exit mobile version