இராணுவ எதிப்பை மீறி துயிலும் இல்லத்தில் சிரமதானம்!

image 8ba6eac43a

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் கருத்துறை பற்று பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து நேற்று (13) சிரமதான பணி ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்

இதன்போது சிரமமான பணியை முன்னெடுத்த பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்களை அருகில் உள்ள படை முகாமினர் விசாரணைக்காக அழைத்து துப்புரவு செய்ய வேண்டாம் என வற்புறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் அமலன் தெரிவித்துள்ளார். படையினரின் எதிர்ப்பை மீறியும் சிரமதான பணியினை முன்னெடுத்துள்ளார்கள்

இதன்போது எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழ்மக்கள் தங்கள் கடமைகளை செய்வதற்கு தயாரா வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version