சேர். பொன் இராமநாதன், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரைகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் மரபார்ந்த நிகழ்வுகளின் வரிசையில் சைவப் பெருவள்ளலார் சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையும் இன்று 10 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி முதல் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளன.

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ள சைவப் பெருவள்ளலார் சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரை நிகழ்வில் “யோகா உளவியலும் – மானுடர் வாழ்வும்” என்ற தலைப்பில் முன்னாள் கலைப் பீடாதிபதியும், மெய்யியல் துறையின் முன்னாள் தலைவருமான வாழ் நாள் பேராசிரியர் என். ஞானக்குமரனும்,

பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ள சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையில் “சுதேசிய சமூக உருவாக்கம் : பத்திரிகைகளின் பங்களிப்பு குறித்த ஓர் உசாவல்” என்ற தலைப்பில் தென் கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் மொழிகள் துறையைச் சேர்ந்த தமிழ்த்துறை இருக்கைப் பேராசிரியர் எம். ஏ. எம் றமீஸூம் நினைவுப் பேருரையாற்றவுள்ளனர்.

image 6487327

#SriLankaNews

Exit mobile version