சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழர்!

tamilni 319

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழர்!

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவர் உள்ளடங்களாக மூன்று வேட்பாளர்கள் போட்டியிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் இங் கொக் சாங், முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரட்ணம் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளதுடன் அன்றையதினம் அந்நாட்டு பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்குபற்றும் தமிழர் ஒருவர் உட்பட மூவரும் நேற்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதன்போது வேட்ப்பாளர்களுக்கு மக்களிடம் உரையாட இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அங்கு கருத்து தெரிவித்த தர்மன் சண்முகரட்ணம்,கண்ணியமான போட்டி, நியாயமான பிரச்சாரம் என்பவற்றுடன் முழு மனதுடன் சிங்கப்பூர் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நமது எதிர்காலம் மேலும் கடினமானதாகவும் சவாலானதாகவும் இருக்கப்போகிறது. அதனால் பல ஆண்டுகளாக நான் பெற்ற அனுபவங்களையும் திறன்களையும் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற இந்த போட்டியில் களமிறங்கியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version